Thursday, January 23, 2025
HomeLatest News2000 வருடங்களுக்கு முன் இயேசு அணிந்திருந்த அங்கி!

2000 வருடங்களுக்கு முன் இயேசு அணிந்திருந்த அங்கி!

ஆண்டுதோறும் டிசம்பர் 25ஆம் திகதி கிறிஸ்துமஸ் பண்டிகையை உலகெங்கிலுமுள்ள மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை முன்னிட்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை மக்கள் அனைவரும் கொண்டாடும் நிலையில் தற்போது இயேசு கிறிஸ்து அணிந்திருந்த அங்கி குறித்த தகவல் இணையத்தில் அதிக கவனம் பெற்று வருகிறது.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு குறித்து பல்வேறு அகழாய்வு பணிகள் நடந்து வருவதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அப்படி நடத்தப்பட்ட அகழாய்வின் மூலமாக கண்டறியப்பட்டது தான் இயேசு கிறிஸ்து அணிந்ததாக கூறப்படும் அங்கி.

ஜெர்மனி நாட்டில் உள்ள திரியர் நகரில் உள்ள புகழ் பெற்ற புனித பீட்டர் தேவாலயத்தில் இந்த அங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சமீபத்தில் இது பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்த அங்கியை அங்கிருக்கும் மக்கள், கிறிஸ்துவின் புனித ஆடையாக கருதி வழிபடுவதாக கூறப்படும் நிலையில், கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டுள்ள இந்த அங்கி எப்போதுமே பார்க்க முடியாது என்றும் ஒரு சில தசாப்தங்களுக்கு ஒரு முறை மட்டுமே பொதுமக்கள் பார்வைக்காக இந்த அங்கி வெளியே வைக்கப்படுகிறது என்றும் தகவல்கள் கூறுகின்றது.

மேலும் கடந்த 1500 ஆண்டுகளாக இந்த இயேசு கிறிஸ்துவின் அங்கி, தேவாலயத்தில் பாதுகாக்கப்பட்டும் வருகிறது. அதேபோல இது போன்ற மத நினைவு சின்னங்கள் மனிதர்களால் கண்டறியப்பட்ட தொல்லியல் கண்டுபிடிப்புகளில் மிகவும் பழமையானது இது என்றும் வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

திரியர் நகரத்தில் உள்ள புகழ்பெற்ற இந்த தேவாலயத்தில் இயேசுவின் அங்கி மட்டுமில்லாமல் மற்றொரு முக்கியமான பொருளும் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதாவது இயேசு கிறிஸ்துவை சிலுவையில் ஏற்றி அறைய பயன்படுத்திய ஆணிகளில் ஒன்றாக கருதப்படும் பழமையான ஒரு ஆணியும் இங்கு பல நூறு ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனை வரலாற்று ஆசிரியர் ஒருவர் கையில் தொட்டு பார்த்து இது மிகவும் அசாதாரணமான ஒன்றாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இது தவிர இயேசு கிறிஸ்து வாழ்ந்த வீடு குறித்த ஆராய்ச்சி பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இயேசு கிறிஸ்து தொடர்பான அகழாய்வில் ஈடுபட்டிருந்த ரீடிங் பல்கலைக்கழக பேராசிரியர் கென் டார்க், கடந்த 2020 ஆம் ஆண்டு இயேசு கிறிஸ்து குழந்தை பருவத்தின் போது தனது தாயுடன் வாழ்ந்த வீடு என்று கூறப்படும் முதலாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வீடு ஒன்றை என்றும் இஸ்ரேல் நாட்டின் நசரத் நகரத்தில் கண்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து இரண்டு ஆண்டுகள் ஆனாலும் இது தொடர்பான வலுவான ஆதாரங்கள் இன்னும் கிடைக்காமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.  

Recent News