Wednesday, December 25, 2024
HomeLatest Newsசீனி வரி தொடர்பில் அடுத்தவாரம் கிடைக்கப்பெறவுள்ள அறிக்கை !

சீனி வரி தொடர்பில் அடுத்தவாரம் கிடைக்கப்பெறவுள்ள அறிக்கை !

சீனி வரி தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை அடுத்த கிழமை தமக்குக் கிடைக்கப்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய சீனி வரி குறைப்பு சம்பவம் தொடர்பாக கணக்காய்வாளர் நாயகம் தயாரித்த அறிக்கையின் அடிப்படையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த அறிக்கையை தயாரித்துள்ளது.

இந்நிலையில் குறித்த அறிக்கை அடுத்த கிழமை தமக்குக் கிடைக்கப்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை கிடைத்த பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.

Recent News