சிறுவன் ஒருவன் தான் தாத்தாவின் மறு அவதாரம் என்று கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளான்.
உத்தரபிரதேச மாநிலம் மைன்புரி ஜாகிரின் ரத்தன்பூரைச் சேர்ந்த மனோஜ் மிஸ்ரா என்பவரிற்கு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி 2015 அன்று வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது பாம்பு கடித்தமையால் தனது பார்வையினை இழந்துள்ளார்.
அதையடுத்து குடும்பத்தினர் அவரை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வேளை மனோஜ் மிஸ்ரா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த சந்தர்ப்பத்தில் அவரது மகள் ரஞ்சனா கர்ப்பமாக இருந்த நிலையில் மனோஜ் மிஸ்ரா இறந்து 20 நாட்களுக்குப் பின்னர் ரஞ்சனாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அக்குழந்தைக்கு ஆர்யன் என்று பெயரிட்டுள்ளனர். அந்த குழந்தை 4 வயதில் தனது தாயிடம் நீ என் தாய் அல்ல என்று அடிக்கடி கூறி வந்துடன் மெயின்புரிக்கு வந்ததும் பாட்டியை பெயர் சொல்லி கூப்பிட்டுள்ளார்.
ஒரு நாள் தாய் பாட்டியின் பாதங்களை தொட்டு வணங்குமாறு கூறிய வேளை கோபமடைந்த சிறுவன் என் பாட்டி அல்ல என்றும் தன்னுடைய மனைவி என்றும் கூறியதுடன் தனது தாயாரை மகள் என்றும், அண்ணனை மகன் என்றும் அழைத்துள்ளார்.
அது மட்டுமன்றி, 8 ஆண்டுகளுக்கு முன்னர் பாம்பு கடித்து இறந்த மனோஜ் மிஸ்ராவே தான் என்றும் தான் தாத்தாவின் மறு அவதாரம் என்றும் கூறி அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
இதனால், மக்கள் அவரிடம் கேள்விகளைக் கேட்க சிறுவனும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளான்.
மேலும் தனது தாத்தாவின் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் குறித்து ஆர்யன் கூறியது அனைவரையும் மென்மேலும் திக்குமுக்காட வைத்துள்ளது.