தமிழ்நாடு முன்னேற்றம் அடையாது இருப்பதற்கு இங்குள்ள ஆட்சியாளர்களே காரணம் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழகத்தின் உரிமை தொடர்ந்தும் பறிபோகியுள்ளதாகவும், திமுக எம்பிக்கள் கூட்டத்தில் கர்நாடகாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இனி வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் அனைத்து பொய்களுக்கும் பதில் கிடைக்கும் எனவும் ஜிஎஸ்டி வந்த பின்னர் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களும் முன்னேற்றம் அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் முன்னேற்றம் அடையவில்லை எனில், அதற்கு காரணம் ஜிஎஸ்டி அல்ல என்றும் இங்குள்ள ஆட்சியாளர்களே காரணம் என்றும் கூறியுள்ளார்.
அத்துடன், அனைத்திற்கும் மத்திய அரசை குறை கூறக்கூடாது என்றும் ஆனாலும், தமிழக அரசு அதனை மட்டுமே செய்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் விவசாய உற்பத்தி குறைந்துள்ளதுள்ளதாகவும் அங்கு நேர்மையான மற்றும் நியாயமான ஆட்சி வர வேண்டும் என்று சபதம் எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.