Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsமுதலிடத்தில் இந்தியா வெளியான கரணம்..!

முதலிடத்தில் இந்தியா வெளியான கரணம்..!

மோட்டார் சைக்கிள் பயன்பாட்டில் உலகில் இந்தியா தான் முதல் இடத்தில் உள்ளது. சாலை போக்குவரத்தின் வருடாந்திர புத்தகத்தின் தகவலின்படி இது தெரிய வந்துள்ளது.

2020-ம் ஆண்டு இந்தியாவில் 32.63 கோடி வாகனங்கள் இருந்தன. இவற்றில் கிட்டத்தட்ட 75 சதவீதம் இருச்சக்கர வாகனங்கள் ஆகும்.

கடந்த 3 ஆண்டுகளில் 2 கோடிக்கும் குறைவான வாகனங்கள் பதிவு செய்யப் பட்டன. ஜூலை மத்தி வரை மொத்த எண்ணிக்கை 34.8 கோடியாக இருக்கிறது.

இந்தியாவுக்கு அடுத்தப்படியாக இந்தோனேசியா இருசக்கர வாகன பதிவில் 2-வது இடத்தில் உள்ளது. கார்களின் எண்ணிக்கைகளில் இந்தியா 8-வது இடத்தில் உள்ளது. சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகியன முதல் 3 இடங்களில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News