Wednesday, December 25, 2024
HomeLatest Newsகாலிமுகத்திடலில் திரண்ட இரண்டு இலட்சம் மக்களாலே ராஜபக்ச அரசு விரட்டியடிப்பு! – வெளிவந்தது புலனாய்வு அறிக்கை

காலிமுகத்திடலில் திரண்ட இரண்டு இலட்சம் மக்களாலே ராஜபக்ச அரசு விரட்டியடிப்பு! – வெளிவந்தது புலனாய்வு அறிக்கை

புலனாய்வுத் தகவல்களின் பிரகாரம் ராஜபக்ச அரசுக்கு எதிரான காலிமுகத்திடல் போராட்டத்தில் இரண்டு இலட்சத்துக்கும் குறைவானோரே கலந்துகொண்டனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகல காரியவசம் எம்.பி. தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த வாரம் போராட்டம் பற்றிய அறிக்கையைச் சமர்ப்பித்தனர்.

இந்த அறிக்கையின் பிரகாரம் இரண்டு இலட்சத்துக்கும் குறைவானோரே இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

போராட்டத்துக்கு அச்சப்பட்டமையால் நாம் ஒரு அடி பின்னோக்கி நகர்ந்தோம். உண்மையில் இதன் பின்னணி அச்சம் கிடையாது. இதுவொரு தந்திரோபாயம்” – என்றார்.

Recent News