Tuesday, December 24, 2024
HomeLatest Newsஆட்சியை நீடிக்கும் நோக்கம்…!உஸ்பெகிஸ்தானில் முன்கூட்டியே நடத்தப்பட்ட அதிபர் தேர்தல்..!

ஆட்சியை நீடிக்கும் நோக்கம்…!உஸ்பெகிஸ்தானில் முன்கூட்டியே நடத்தப்பட்ட அதிபர் தேர்தல்..!

உஸ்பெகிஸ்தான் நாட்டில் முன்கூட்டியே அதிபர் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

அந் நாட்டில், அதிபராக ஷவ்கத் மிர்சியோயேவ் பதவி வகித்து வரு நிலையில், அங்கு அதிபரின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பாக கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

அந்த வேளை, அதற்கு பெரும்பான்மையான மக்கள் ஆதரவு அளித்தமையால் அதிபர் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளாக உயர்த்தவும், தேர்தலில் தொடர்ந்து 2 முறைக்கு மேல் போட்டியிடுவதற்கும் அந் நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது.

தற்போது அதிபராக பதவி வகிக்கும் மிர்சியோயேவின் பதவிக்காலம் 2026 ஆம் ஆண்டு வரை உள்ளது.

ஆயினு, மக்களின் இந்த முடிவின்படி முன்கூட்டியே பொதுத்தேர்தலை நடத்துவதற்காக அவர் மே 8 ஆம் திகதி அழைப்பு விடுத்துள்ள நிலையில், அங்கு நேற்றைய தினம் அதிபர் தேர்தல் நடைபெற்றுள்ளது.

அந்த தேர்தலில், அதிபர் மிர்சியோயேவ், மக்கள் ஜனநாயக கட்சியின் உலுக்பெக் இனோயாடோவ் என்று பலர் போட்டியிட்டுள்ளனர்.

அத்துடன், அதிபர் பதவிக்காலம் உயர்த்தப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் இந்த தேர்தல் அங்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News