Thursday, January 23, 2025

பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கம்..!சீனா சென்றுள்ள நியூசிலாந்து பிரதமர்..!

நியூசிலாந்து நாட்டின், பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் ஐந்து நாட்கள் அரசுமுறை பயணமாக சீனா சென்றுள்ளார்.

சீனாவின் முக்கிய ஏற்றுமதி சந்தையாக நியூசிலாந்து காணப்படும் நிலையிலும் இருநாடுகளிற்கு இடையிலான நல்லுறவு நீடித்து வரும் சூழலிலும் கிறிஸ் ஹிப்கின்ஸ் பிரதமராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக சீனாவுக்கு அரசுமுறை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

அத்துடன், டியான்ஜினில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் ஹிப்கின்ஸ்,வணிக பிரநிதிகள் முன்னிலையில் நாட்டிற்கு தேவையான முதலீடுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் பேசியுள்ளார்.

அதையடுத்து, நியூசிலாந்து பிரதமர் ஹிப்கின்சுடன் சீன அதிபர் ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

கொரோனா தொற்று முடிந்துள்ள போதிலும் மந்த நிலையில் உள்ள நியூசிலாந்தின் பொருளாதாரத்தினை மீட்டெக்கும் முயற்சிகள் தொடர்பாக அவர்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அத்துடன், நாட்டின் சுற்றுலா, கல்வி மற்றும் ஏற்றுமதி துறைகளை உயர்த்தும் நோக்கில் சீனாவின் உதவியை ஹிப்கின்ஸ் கோரியுள்ளார்.

அதையடுத்து, சீன அதிபர் ஜின்பிங் உடனான பேச்சுவார்த்தை மிகவும் பெரியளவிலான முக்கியத்துவத்தை அளிக்கும் என பிரதமர் ஹிப்கின்ஸ் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Latest Videos