Saturday, January 25, 2025
HomeLatest Newsயாழில் கதலி வாழைக்குலைகளை டுபாய்க்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் ஆரம்பம்..!

யாழில் கதலி வாழைக்குலைகளை டுபாய்க்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் ஆரம்பம்..!

கதலி வாழைப்பழத்தை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் திட்டம் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வாழைக்குலைககளானது பதப்படுத்தி டுபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

இந்த திட்டத்திற்கு 700 விவசாயிகளகடமிருந்து வாழைக்குலைககள் எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 300 விவசாயிகளிடமிருந்தே வாழைக்குலைககள் கிடைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

விவசாய அமைச்சின் கீழ் உள்ள விவசாய நவீனமயமாக்க திட்டத்தின் கீழ் உலக வங்கியின் அனுசரணையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்காக பதிவு செய்யப்பட்ட சங்கம் ஒன்று காணப்படுகிறது. இதன்மூலம் வாரத்துக்கு 40 ஆயிரம் கிலோ வாழைக்குலைகள் தற்போது ஏற்றுமதி செய்ய முடிகிறதாக கூறப்படுகிறது. 10 ஆயிரம் கிலோவிற்கு 12 ஆயிரம் டொலர்கள் வருமானமாக ஈட்ட முடியும் என கூறப்பட்டது.

Recent News