யாழ் வடமாகாண தனியார் ஊழியர்களின் பிரைச்சினைகள் கருத்திற்கொள்ளப்பட்டு தீர்த்து வைக்கப்பட வேண்டும் எனவும் சங்கத்தின் பதிவின் அடிப்படையில் ஊழியர்களின் பிரைச்சினைகள் 6 மாத காலத்திற்குள் தீர்த்து வைக்கப்படும் எனவும் வடமாகாண தனியார் சங்கத்தின் வட உபதலைவர் பாலசுந்தரம் லக்சன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் யாழ் வடமாகாண தனியார் சங்கத்தின் ஏற்பாட்டில் கச்சேரி பிரதான வாசலில் இருந்து மத்திய நிலையம் நோக்கி மாபெரும் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கரவண்டி பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அந்த பேரணியில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
ஊழியர் சங்கமானது பதிவு செய்யப்பட்ட போதிலும் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் கொரோனா காலங்களின் இது சரிவர இயங்கவில்லை. ஆகையால் இந்த பேரணியானது ஊழியர்களின் நலன் கருதியே முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான பலம் எம்மிடம் தற்பொழுது உள்ளது.
வர்த்தக சங்கத்துடன் இணைந்து செயலாற்ற தீர்மானித்துள்ளோம். அந்த வகையில் வரும் வாரமளவில் அவர்களுடன் கலந்துரையவுள்ளோம்.
அவ்வாறு அவர்கள் எம்முடன் இணைந்து செயற்பட விடில் எமக்காக பண உதவி முதற்கொண்டு பல்வேறு உதவிகளை செய்வதற்கு இங்கும் சரி வெளிநாட்டிலும் சரி பக்கபலம் காணப்படுகின்றது.
இந்த சங்கத்தினை பதிவது தொடர்பிலும் பல குற்றசாட்டுகள் வைக்கப்பட்ட போதிலும் ஒரு அமைச்சரிடம் கலந்துரையாடி அவரின் உதவியின் மூலம் பதிவு மேற்கொள்ளப்பட்டது.
அந்த பதிவின் அடிப்படையில் ஊழியர்களின் பிரைச்சினைகளை 6 மாத கலங்களிற்குள் தீர்த்து வைப்போம்.
இன்றைய தினம் கடையடைப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட போதிலும் சிலர் வர்த்தக நிலையங்கள், கடைகள் போன்றவற்றை திறந்துள்ளார்.
அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் வருகின்ற வாரமளவில் திணைக்களத்தின் உதவியுடன் ஒவ்வொரு கடைகளிற்கும் சென்று ஊழியர்களிற்குரிய சலுகைகள் ஒழுங்காக செய்யப்பட்டுள்ளதா? என்பதனை பார்க்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.