Friday, November 22, 2024
HomeLatest Newsஉலக கிண்ண கால்பந்தாட்ட போட்டி நடத்துவதில் சிக்கல் கட்டாரில் பரவி வரும் புதிய நோய் !

உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டி நடத்துவதில் சிக்கல் கட்டாரில் பரவி வரும் புதிய நோய் !

வளைகுடா நாடான கட்டாரில் 2022  உலகக் கோப்பை உதைப்பந்தாட்ட போட்டி நடைபெற்று வருகிறது.நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் விளையாட்டு உலகின் மிகப் பெரிய திருவிழாவாக கருதப்படுகிறது.

இந்தாண்டு உலகக் கோப்பை போட்டிகள் கட்டார் நாட்டில் நடைபெற்றுவருகிறது. நவம்பர் 20ஆம் திகதி கோலாகலமாகத் தொடங்கிய இப்போட்டிகள் டிசம்பர் 18ஆம்  திகதி வரை நடைபெறுகின்றன.

2022 உலகக் கோப்பையில் பிபாவின் ஐந்து கூட்டமைப்புகளைச் சேர்ந்த 32 அணிகள் கோப்பைக்காக போட்டியிடுகின்றன. இந்நிலையில், உலகக் கோப்பையை காண பல்வேறு நாடுகளில் இருந்து 12 லட்சம் மக்கள் கட்டார் வருகை தந்துள்ளனர்.

அதேபோல், கட்டார் நாட்டிலும் 28 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். எனவே, கட்டாரில் சுமார் 40 லட்சம் மக்கள் திரண்டிருக்கும் இந்த வேளையில், உலக சுகாதார அமைப்பு அந்நாட்டில் ஒட்டகக் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் நடைபெறும் பிரதான சர்வதேச நிகழ்வு இதுவாகும். பொதுவாக மத்திய கிழக்கு நாடுகள் பாலைவனம் சார்ந்த பகுதிகள் என்பதால் அங்கு ஒட்டகக் காய்ச்சல் பரவல் காணப்படுவது இயல்பு.

ஒட்டகம் போன்ற விலங்குகளில் இருந்து பரவும் இந்த காய்ச்சலுக்கு மெர்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு முதல் முதலில் பதிவான இந்த மெர்ஸ் காய்ச்சல் காரணமாக இதுவரை 2,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

அதேபோல், 935 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, மெர்ஸ் தொற்றும் உலகப்பெருந்தொற்றாக பரவும் அபாயம் உள்ளது.

எனவே, கட்டார் உலகக் கோப்பையை காணச் சென்ற பார்வையாளர்கள் உரிய முன்னெச்சரிக்கையுடன் உணவு, குளிர்பானங்கள் போன்றவற்றை உண்ண வேண்டும், என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

மேலும்,அந்நாட்டின் சுகாதாரத்துறை தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

Recent News