Thursday, December 26, 2024
HomeLatest Newsஇடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்வதில் ஏற்படவுள்ள சிக்கல்

இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்வதில் ஏற்படவுள்ள சிக்கல்

எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருளை பெற்றுக்கொள்ளும் முறையான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படாவிட்டால் நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்க முடியாதென உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எரிபொருள் விவகாரம் தொடர்பில் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் வடக்கு கிழக்கு உள்ளிட்ட தூர பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆகும்.

எவ்வாறாயினும் எரிபொருள் பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களாக நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பல உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஜனாதிபதியை நியமிப்பதற்கான முக்கிய வாக்கெடுப்பு இந்த வாரம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான முறையான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு சபாநாயகர், அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 20ஆம் திகதி இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News