Thursday, January 23, 2025
HomeLatest NewsIndia Newsமனைவியால் இங்கிலாந்தின் பிரதமரான இந்திய வம்சாவளி..!

மனைவியால் இங்கிலாந்தின் பிரதமரான இந்திய வம்சாவளி..!

இங்கிலாந்தின் தற்போதைய பிரதமரான ரிஷி சுனக் தனது மனைவியின் மூலமே அந்த உயர் பதவிக்கு சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த விடயத்தினை ரிஷி சுனக்கின் மனைவியின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல தொழில் அதிபரும், ‘இன்போசிஸ்’ தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனருமான என்.ஆர்.நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள காணொளியிலே இதனை கூறியுள்ளார்.

குறித்த காணொளியில் இது மனைவியின் மகிமை என்றும் ஒரு மனைவியால் தனது கணவரை எப்படி மாற்ற முடியும் என்று பாருங்கள்.

என் கணவரை (நாராயணமூர்த்தி) நான் தொழில் அதிபராக உருவாக்கினேன். அதே போன்று எனது மகள் மகள், அவளது கணவரை (ரிஷி சுனக்) இங்கிலாந்து நாட்டிற்கே பிரதமராகியுள்ளாள். என்று பெருமிதமாக கூறியுள்ளார்.

அவ்வாறிருக்கையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், 2009 ஆம் ஆண்டு, என்.ஆர்.நாராயணமூர்த்தி மற்றும் சுதா தம்பதியரின் மகள் அக்ஷதா மூர்த்தியை காதலித்து கரம்பிடித்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு இங்கிலாந்தின் பிரதமராக ரிஷி சுனக் (வயது 42) நியமனமும் பெற்றுக்கொண்டார்.

அந்த வகையில் இவர் இங்கிலாந்தின் மிகவும் இளம் வயது பிரதமர் என்ற பெருமையினையும் தன்வசமாகியுள்ளார்.

Recent News