நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலை பாரியளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சென்ற வாரம் 300 ரூபாவை அண்மித்த ஒரு கிலோ போஞ்சியின் விலையானது இன்றையதினம் 100 ரூபாவாக வீழ்ச்சியடைந்ததுடன்ஒரு கிலோ தக்காளியின் விலை 60 ரூபாவாகவும், கரட் 110 கிலோவாகவும், சிவப்பு உருளைக்கிழங்கு 100 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.
குறிப்பாக எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு காய்கறிகள் கொள்முதல் செய்ய வரும் வியாபாரிகள் தற்போது வருகை தராமையே காய்கறி விலை வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.