Saturday, January 18, 2025
HomeLatest Newsஇந்திய உரத்தின் விலை பத்தாயிரம் ரூபா!

இந்திய உரத்தின் விலை பத்தாயிரம் ரூபா!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உரத்தை 10ஆயிரம் ரூபாவுக்கு விவசாயிகளுக்கு பெற்றுத்தரமுடியும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை இன்று நாடாளுமன்றில் குறிப்பிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், கேட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து கிடைக்கவுள்ள 65ஆயிரம் மெட்றிக் தொன்களில் 10ஆயிரம் தொன் தேயிலை பயிர்ச்செய்கைக்கு வழங்கப்படவுள்ளது.

5ஆயிரம் மெட்றிக்தொன் சோளப்பயிர்ச்செய்கைக்கு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Recent News