Tuesday, December 24, 2024
HomeLatest Newsஇலங்கையில் மீண்டும் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!

இலங்கையில் மீண்டும் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!

வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. 

இந்த நிலையில், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 634,708 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சிறிது உயர்ந்து வருகின்றது.

மேலும், கடந்த காலங்களை விட தற்போது தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 179,150 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 164,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 156,750 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.

எனினும், அடுத்து வந்த சில நாட்களில் 20 தொடக்கம் 40 ஆயிரம் ரூபாவால் இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்து தற்போது 160,000 என்பதை அண்மித்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.  

Recent News