Tuesday, December 24, 2024
HomeLatest NewsIndia Newsவிலை குறையும் சமையல் எண்ணெய்..!மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்..!

விலை குறையும் சமையல் எண்ணெய்..!மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்..!

இந்தியாவில், சமையல் எண்ணெய் வகைகளின் விலை குறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் வகைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வரி விலக்கு இன்று முதல் அமலுக்கு வருவதால் சமையல் எண்ணெயின் விலை குறையும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாமாயில், சோயாபீன்ஸ், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்டவை மலேசியா, இந்தோனேசியா நாடுகளிலிருந்து 60 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், சுங்க வரி மற்றும் செஸ் ஆகியவற்றிலிருந்து மத்திய அரசு சில நிபந்தனைகளுடன் விலக்கு அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News