Sunday, January 26, 2025
HomeLatest Newsஇலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் பேக்கரி பண்டங்களின் விலை!

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் பேக்கரி பண்டங்களின் விலை!

பேக்கரி பண்டங்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதீத மின் கட்டண உயர்வால் பேக்கரி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் கமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பேக்கரி தொழிலில் மாவு பிசைவது முதல் பாண் சுடுவது, உணவு தயாரிப்பது, கடையில் சந்தைப்படுத்துவது வரை மின்சாரம் இன்றியமையாதது.

பேக்கரி தொழிலை எப்படித் தொடர முடியும்? அண்மைய நாட்களாக காஸ் விலை இரகசியமாக உயர்த்தப்பட்டு வருகிறது. 

இதன் காரணமாக பேக்கரி உணவுகளின் விலையை தயக்கத்துடன் அதிகரிக்க வேண்டியுள்ளது என்றார்.

Recent News