எகிப்தில் ஷாம் எல் சீக் நகரில் நாளைமுதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபை காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 உலக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை அதிகாலை எகிப்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த மாநாட்டில் எதிர்வரும் 7, 8 ஆம் திகதிகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றவுள்ளார். இலங்கையில் உருவாக்கப்படவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான செயலகம் தொடர்பாகவும் இலங்கை உட்பட சர்வதேச ரீதியிலான காலநிலை மாற்றம் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவரது உரையின்போது கருத்துக்களை முன்வைக்கவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எகிப்துக்கானவிஜயத்தின் போது, எகிப்திய ஜனாதிபதி எப்டெல் பெட்டா சிஸி மற்றும் அந்நாட்டு பிரதமர் மொட்டாபா மெட்பௌலி ஆகியோரைச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். நான்கு தினங்களுக்கான விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி எதிர்வரும் 10 ஆம் திகதி மீள நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்