Saturday, December 28, 2024
HomeLatest News‘கோ ஹோம் ரணில்’ போராட்டக்காரர்களுக்கு புதிய இடத்தை ஒதுக்கியுள்ள ஜனாதிபதி

‘கோ ஹோம் ரணில்’ போராட்டக்காரர்களுக்கு புதிய இடத்தை ஒதுக்கியுள்ள ஜனாதிபதி

போராட்டக்காரர்கள் தமது ‘கோ ஹோம் ரணில்’ போராட்டத்தை, தடையின்றி நடத்துவதற்காக கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவினை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த விடயத்தினை தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரசாங்கத்தையும், நாடாளுமன்றத்தையும், நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட துறைசார் குழுக்களை அமைத்து நடத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recent News