Friday, January 24, 2025
HomeLatest Newsகழிவறைக்கு கூட்டி சென்ற பொலிஸார்..!மாயமான இளம் பெண்..!வெளியான பின்னணி..!

கழிவறைக்கு கூட்டி சென்ற பொலிஸார்..!மாயமான இளம் பெண்..!வெளியான பின்னணி..!

பிரான்சில் இளம்பெண் ஒருவர் கழிவறைக்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்ற நிலையில் மாயமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

35 வயதான மெலனி என்ற பெண்ணே இவ்வாறு காணமால் போயுள்ளார்.

மெலனி பிரான்சிலுள்ள டோர்டோக்னே என்ற இடத்தில் காரில் பயணித்துக் கொண்டிருந்த போது மதியம் வேளை அவரது காரில் பழுது ஏற்பட்டுள்ளது.

இத்தானில், அவருக்கு உதவியாக போக்குவரத்து பொலிஸார் ஒருவர் வந்துள்ளார். தான் கழிவறைக்குச் செல்ல வேண்டும் என மெலனி கூற, அந்த பொலிஸாரும் தனது வாகனத்திற்கு அருகிலுள்ள கழிவறை ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில், கழிவறைக்குச் சென்று வெகு நேரம் ஆகியும் மெலனியை காணாமையால் கவலையடைந்த போக்குவரத்து பொலிஸார், உடனடியாக ஏனைய பொலிஸாரை உதவிக்கு அழைத்துள்ளார்.

அதன் பின்னர் பொலிஸாரிற்கு மெலனிக்கு disorientation episodes என்னும் தான் எங்கே இருக்கின்றேன், தான் யார் என்பதை மறந்துபோகும் பிரச்சினை இருப்பது அவரது பெற்றோர் மூலம் தெரிய வந்துள்ளது.

இதற்கு முன்னர் ஒரு முறை அவர் 15 நாட்கள் வரை காணாமல் போயுள்ளார்.

இதனால், பொலிஸார் மெலனியை காணாமல் போன நபர் என அறிவித்து தீவிரமாகத் தேடி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News