Thursday, January 23, 2025
HomeLatest Newsபெண் போல் அபாய குரல் எழுப்பிய கிளியால் வீடு தேடி வந்த பொலிஸார்..!சுவாரசிய சம்பவம்..!

பெண் போல் அபாய குரல் எழுப்பிய கிளியால் வீடு தேடி வந்த பொலிஸார்..!சுவாரசிய சம்பவம்..!

வீடு ஒன்றில் உதவிக்காக பெண் கதறி அழுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சோதனையிட சென்ற பொலிஸார் ஆச்சரியமடையும் விதமாக சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவம், பிரிட்டனின் கேன்வி தீவைச் குடியிருப்பு வட்டாரத்திலே இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவரின் வீட்டில், பெண் ஒருவர் கதறி அழும் சத்தம் கேட்ட நிலையில் பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கியுள்ளனர்.

அதையடுத்து, அங்கு விரைந்த பொலிஸார், அங்கு சென்று பார்த்த வேளை அந்த வீட்டில் கதறி அழுதது பெண் அல்ல கிளி என்று தெரிய வந்துள்ளது.

கதறி அழுத கிளிக்குச் சொந்தக்காரரான ஸ்டீவ் வூட் சுமார் 21 ஆண்டுகளாகப் பறவைகளை வளர்த்து வரும் நிலையில், தனது வீட்டு வாசலில் பொலிசாரை கண்டதும் அஞ்சியுள்ளார்.

அதையடுத்து, பொலிஸார், இங்கு பெண் ஒருவர் உதவிக்காக கதறி அழுது கொண்டிருக்கும் சத்தம் கிடைத்ததாகவும், ஆயினும் இங்கு எந்த பிரச்சினையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

அதற்கு, ஸ்டீவ் வூட்ம், கிளி என்றும் இல்லாதவாறு கத்திக்கொண்டிருந்ததாக தெரிவித்ததை தொடர்ந்து அங்கிருந்து பொலிஸார் சென்றுள்ளனர்.

Recent News