Tuesday, December 24, 2024
HomeLatest Newsஇலங்கையில் 24,000இற்கும் அதிகமான குடும்பங்களின் அவல நிலை!

இலங்கையில் 24,000இற்கும் அதிகமான குடும்பங்களின் அவல நிலை!

காலி மாவட்டத்தில் 24,000இற்கும் அதிகமான குடும்பங்கள் கடுமையான உணவு நெருக்கடியில் உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் சாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்த அவர், அந்தக் குடும்பங்களில் சுமார் 800 ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மாதம்பகம, ஹிக்கடுவை மற்றும் பல பிரதேச செயலகங்களில் உள்ள குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆபத்தில் உள்ள குடும்பங்களில் குழந்தைகளுக்கு மேலதிகமாக கர்ப்பிணித் தாய்மார்களும் இருப்பதாக காலி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலையீட்டின் மூலம் உரிய இடர்பாடுகள் உள்ள குடும்பங்களுக்கு உலர் உணவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recent News