Tuesday, December 24, 2024
HomeLatest Newsவிமான நிலைய கட்டிடத்தில் மோதிய விமானம்..!நூலிழையில் உயிர் தப்பிய விமானி..!

விமான நிலைய கட்டிடத்தில் மோதிய விமானம்..!நூலிழையில் உயிர் தப்பிய விமானி..!

சிறிய ரக விமானம் ஒன்று விமான நிலைய கட்டிடத்தில் மோதி விபத்திற்குள்ளான நிலையில் விமானி, சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

இச்சம்பவம் கலிபோர்னியாவில் இடம்பெற்றுள்ளது.

ஒற்றை எஞ்சின் கொண்ட செஸ்னா 172 ரக விமானத்தில் விமானி ஒருவர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விமானம், கட்டுப்பாட்டை இழந்து லாங் பீச் விமான நிலையத்தில், விமானங்களை நிறுத்திவைக்கும் ஷெட்டின் மீது மோதியுள்ளது.

அதன் பொழுது, விமானத்தின் முன்பகுதி விமான நிலையத்தின் மேற்கூரைக்குள் புகுந்து விபத்திற்குள்ளாகி உள்ளது.

ஆயினும், இந்த விபத்தில் விமானி காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News