Thursday, December 26, 2024
HomeLatest Newsவிமானத்தின் ஜன்னலுக்கு வெளியே தலையை தொங்க விட்ட பைலட் : காரணம் இதுதான்!

விமானத்தின் ஜன்னலுக்கு வெளியே தலையை தொங்க விட்ட பைலட் : காரணம் இதுதான்!

விமான பயணி ஒருவர் தனது பயணத்தின் போது செல்போனை மறந்து விட்டு வந்ததை தொடர்ந்து, அவருக்காக விமான பைலட் விமானத்தின் ஜன்னல் வழியாக செல்போனை வாங்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

அமெரிக்காவின் கலிபோர்னியா விமான நிலையத்தில் விமானம் புறப்படும் நேரத்தில் அவசர அவசரமாக பயணம் செய்து விமானத்தில் ஏறிய பயணி ஒருவர் தனது செல்போனை வெளியிலேயே மறந்து வைத்து விட்டு வந்துள்ளார்.

இதனை அறிந்த விமான நிலைய ஊழியர்கள் அந்த செல்போனை பயணியிடம் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக அந்த விமானத்தின் பைலட்-டை விமானத்தின் ஜன்னல் வழியாக வெளியேறி அந்த செல்போனை பெற்று சம்பந்தப்பட்ட பயணியிடம் சேர்க்குமாறு செய்துள்ளனர். 

இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோவில், விமானத்தின் பைலட் ஜன்னல் வழியாக தனது உடலை வெளியே எடுத்து சக விமான நிலைய அதிகாரியிடம் இருந்து செல்போனை வாங்குவது இடம்பெற்றுள்ளது.

விமானி அந்த செல்போனை பெற்றதும் அனைத்து ஊழியர்கள் முகத்திலும் மகிழ்ச்சி புன்னகை தோன்றியதும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News