Tuesday, January 28, 2025
HomeLatest NewsIndia Newsநாளை திறக்கப்படும் பெருங்களத்தூர் மேம்பாலம்..!மகிழ்ச்சியில் மக்கள்..!

நாளை திறக்கப்படும் பெருங்களத்தூர் மேம்பாலம்..!மகிழ்ச்சியில் மக்கள்..!

பெருங்களத்தூர் மேம்பாலத்தின் மற்றொரு பகுதி நாளைய தினம் திறந்து வைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெருங்களத்தூர் ரயில் நிலையத்திற்கு அருகில், மாநில நெடுஞ்சாலைத் துறை, ரெயில்வே இணைந்து ரூ.234 கோடியில், மேம்பாலம் கட்டும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

அதில், ஜி.எஸ்.டி., சாலையில், செங்கல்பட்டு – தாம்பரம் மார்க்கமான ஒரு வழிப்பாதை, 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ள நிலையில் அதனை தொடர்ந்து, ஜி.எஸ்.டி., சாலையில் வண்டலூர் மார்க்கமாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

மறுபுறம் ரெயில்வே தண்டவாளத்தை கடந்து, பீர்க்கன்காரணை சீனிவாசா நகரில் இறங்கும் மற்றொரு பாதைக்கான பணிகள் தீவிரமாக இடம்பெற்று வந்தன.

இந்நிலையில், அதன் பணிகள் நிறைவடைந்து சில வாரங்களாகியும் இப்பாதை திறக்கப்படாமல் இருந்தமையால் மக்களிடம் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

அந்த வகையில், பெருங்களத்தூர் மேம்பாலத்தின் மற்றொரு பகுதி நாளைய தினம் (புதன்கிழமை) திறந்து வைக்கப்படவுள்ளது.

அதாவது, சீனிவாசா நகர் பாதையை, மக்கள் பயன்பாட்டிற்காக நாளை மாலை 3:00 மணிக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News