Tuesday, December 24, 2024
HomeLatest Newsநபரின் கணக்கு முடக்கம்...!முகநூல் நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்...!

நபரின் கணக்கு முடக்கம்…!முகநூல் நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்…!

நபர் ஒருவரின் முகநூல் கணக்கு முடக்கப்பட்டதால் முகநூல் நிறுவனத்திற்கு இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் கொலம்பஸ் நகரை சேர்ந்த ஜெசன் கிரவ்பொர்ட் வழக்கறிஞரான ஜெசனின் முகநூல் கணக்கு 2022 ஆண்டு முடக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குழந்தைகள் தொடர்பான ஆபாச பதிவுகளை பார்த்து முகநூல் விதிகளை மீறியதால் கணக்கு முடக்கப்படுவதாக முகநூல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

அதை தொடர்ந்து ஜேசன், முடக்கப்பட்ட தனது முகநூல் கணக்கை மீண்டும் செயற்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக முகநூல் நிறுவனத்தை தொடர்பு கொண்ட போதிலும் அது தோல்வியில் முடிந்துள்ளது.

இதனால், அவர் தனது கணக்கை முடக்கிய முகநூல் நிறுவனத்தின் மீது ஜார்ஜியா மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு குறித்த விசாரணை இடம்பெற்ற நிலையில் அவரது கணக்கை முடக்கியமைக்கான காரணத்தை முகநூல் நிறுவனத்தினால் தெரிவிக்க முடியவில்லை.

அதனை பதிவு செய்த நீதிமன்றம் எந்த வித காரணமும் இன்றி பயனாளரின் முகநூல் கணக்கை முடக்கியதற்காக சம்பந்தப்பட்ட பயனாளருக்கு 50 ஆயிரம் டொலர்கள் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையடுத்து, முடக்கப்பட்ட ஜெசனின் முகநூல் கணக்கு மீண்டும் செயற்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அதே வேளை, முகநூல் நிறுவனம் இதுவரை ஜெசனுக்கு இழப்பீடு வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News