Tuesday, December 24, 2024
HomeLatest Newsலொத்தர் சீட்டிலுப்பில் 22 மில்லியனை வென்ற நபர்..!யார் என்று அறியாது முழிக்கும் நிறுவனம்..!

லொத்தர் சீட்டிலுப்பில் 22 மில்லியனை வென்ற நபர்..!யார் என்று அறியாது முழிக்கும் நிறுவனம்..!

நபர் ஒருவர் 22 மில்லியன் டொலர் பணப் பரிசினை வென்ற நிலையில் அது குறித்து அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் ஜாக்பொட் என்பவரே 22 மில்லியன் டொலர் பரிசினை வென்றெடுத்துள்ளார்.

இதையடுத்து அவர் வெற்றி பெற்ற விடயம் குறித்து மின்னஞ்சல் ஊடாக ஜாக்பொட்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், இந்த பரிசுத் தொகையை யார் வென்றார்கள் என்பது தெரியாது என லொத்தர் சீட்டிலுப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், தாம் அனுப்பிய மின்னஞ்சலை பார்த்து விட்டு உரிமையாளர் வரும் வரையில் யார் வெற்றியாளர் என்பது தெரியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

Recent News