Monday, January 20, 2025
HomeLatest Newsதமிழகத்தில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் வர முற்பட்டவர் கைது!

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் வர முற்பட்டவர் கைது!

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு தப்பி வர முயன்றவர் இராமேஸ்வரத்தில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர், இலங்கையில் இருந்து 2019ஆம் ஆண்டு தமிழகத்திற்குச் சென்ற நிலையில், குற்றவியல் வழக்கு ஒன்றில் அகப்பட்டு சில மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார்.

அவ்வாறு சிறையிருந்தவர் கடந்த வாரம் வெளிவந்த நிலையில், இராமேஸ்வரம் ஊடாக இலங்கைக்கு படகு மூலம் தப்பிச் செல்ல இன்னுமொருவர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

இவ்வாறு தப்பிச் செல்ல முயன்றவரையும் ,அதற்காக ஏற்பாடு செய்து கொடுத்தவரையும் இராமேஸ்வரத்தில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

Recent News