Tuesday, December 24, 2024
HomeLatest Newsகூகுள் மேப் ஐ நம்பி கழிவுநீர் வாய்க்காலில் காரை இறக்கிய நபர்!

கூகுள் மேப் ஐ நம்பி கழிவுநீர் வாய்க்காலில் காரை இறக்கிய நபர்!

தற்போதைய உலகில் கூகுள் மேப் செயலியை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த தளத்தில் பல்வேறு புதிய அம்சங்களை வெளிவந்த வண்ணம் உள்ளன என்றுதான் கூறவேண்டும்.

அதேபோல் வாகன ஓட்டுநர்கள் முதல் பாதசாரிகள் வரை இந்த கூகுள் மேப்ஸ் வசதியை அதிகம் பயன்படுத்துகின்றனர்இ காரணம் முன்பின் தெரியாத இடத்துக்கு முகவரியை மட்டும் வைத்துக் கொண்டு செல்வோருக்குப் பேருதவி செய்கிறது இந்த கூகுள் மேப்.

ஆனால் ஒரு சில நேரங்களில் இந்த கூகுள் மேப்ஸ் செயலியைப் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.

இந்தியாவில் திருக்கோவிலூரில் கூகுள் மேப்-ஐ பார்த்தவாறு பயணம் செய்ததால்இ கழிவு நீர் வாய்க்காலில் கார் இறங்கி விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அதாவது சென்னையை சேர்ந்த இளைஞரொருவர் சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் திருக்கோவிலூர் அருகே உள்ள ஸ்ரீ ஞானானந்தகிரி தபோவனம் என்ற மடத்திற்கு வந்துள்ளார். 

பின்பு அங்கு இருந்து கூகுள் மேப் உதவியுடன் கீழையுர் பகுதியில் உள்ள வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் தபோவனம் மடத்திற்குச் செல்ல கூகுள் மேப்-ஐ பயன்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக கோவிலில் இருந்து நேராகச் சென்று வலப்புறம் உள்ள பாலத்தில் திரும்பிச் செல்லும்படி கூகுள் மேப் காட்டியுள்ளது. ஆனால் அதனை சரியாக புரிந்து கொள்ளாத ஸ்ரீராம் மெயின் ரோட்டில் செல்லுவதற்குப் பதிலாக தென்பெண்ணை ஆற்றுக்குச் செல்லும் குறுகிய சாலையில் கூகுள் மேப்-ஐ பயன்படுத்தி சென்றுள்ளார்.

அந்த சமயம் எதிர்பாராத விதமாக குறுகிய சாலையில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் கார் இறங்கி விட்டது. குறிப்பாக இந்த சம்பவத்தில் காரில் இருந்த அனைவரும் அதிர்ஷ்டவசத்தால் தப்பினர்.

அதன்பின்பு கழிவு நீர் வாய்க்காலில் இறங்கிய கார், ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின்னர், கிரேன் உதவியோடு மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Recent News