Thursday, January 23, 2025

ஐந்தாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் நோயாளி..! அறுவை சிகிச்சை செய்து வைத்தியர்கள் சாதனை..!

மிகவும் தொலைவிலுள்ள நோயாளிக்கு ரோபோ மூலம் அறுவை சிகிச்சை செய்து வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இந்த சாதனை சீனாவில் இடம்பெற்றுள்ளது.

அதாவது ஐந்தாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்து ரோபோ மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில், இவ்வாறாக வெகு தொலைவில் உள்ள நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்தது இதுவே உலகில் முதல் முறை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த அறுவை சிகிச்சைக்கு 5ஜி நெட்வொர்க் உதவிகரமாக இருந்ததாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Videos