Thursday, January 23, 2025
HomeLatest NewsIndia Newsமூக்கு முட்ட கறி விருந்து உண்ட மயக்கத்தில் குழந்தையை மறந்து சென்ற பெற்றோர்..!மீட்ட பொலிஸார்..!

மூக்கு முட்ட கறி விருந்து உண்ட மயக்கத்தில் குழந்தையை மறந்து சென்ற பெற்றோர்..!மீட்ட பொலிஸார்..!

கோவிலில் நடந்த கறி விருந்துக்கு சென்ற பெற்றோர் மகளை மறந்து விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டி பட்டி என்ற பகுதியில் கோவில் ஒன்றில் நேற்றைய தினம் திருவிழா மற்றும் கறிவிருந்து நடந்ததுள்ளது.

இந்த விருந்தில் பலர் கலந்து கொண்டுள்ள நிலையில் அதில், சக்திவேல் மற்றும் ஜோதி என்ற தம்பதி தமது மூன்று வயது மகளுடன் சென்றுள்ளனர்.

அத் தம்பதி அங்கு வயிறார கறி விருந்து சாப்பிட்ட பின்னர் அந்த மயக்கத்தில் மகளை மறந்து அங்கு விட்டு வீட்டுக்கு சென்றுள்ளனர்.

பெற்றோர் இல்லாததால் அந்த பெண் குழந்தை அழுதுள்ளது. அதனை கண்ட பொலிஸார் அந்த குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளதுடன் அவர்களிற்கு அறிவுரையும் கூறியுள்ளனர்.

இதனால், தமது தவறை உணர்ந்த அத்தம்பதி குழந்தையை பெற்றுக்கொண்டு பொலிஸாரிடம் மன்னிப்பு கோரியுள்ளனர்.

Recent News