தமிழர் தலைநகரான திருகோணமலையில் 4 அடி உயரமுள்ள புத்தர் சிலையை வைப்பதற்கு எதிராக தமிழ்த் தேசியப் பேரவையால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் நேற்று இரவிரவாக மேற்கொள்ளப்பட்டது.
270 ஆண்டுகளுக்கு முன் தாய்லாந்திலிருந்து திருகோணமலைக்கு வந்திறங்கியதாகக் கூறப்படும் பிக்குகளை நினைவு கூரும் முகமாகவும் அவர்களை கௌரவப்படுத்தும் முகமாகவும் அவர்கள் வந்திறங்கியதாகக் கூறப்படும் திருகோணமலை.நெல்சன் திலையரங்குக்கு முன்னால் தொல்பொருட் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடத்திலே தாய்லாந்திலிருந்து வரும் பிக்குகளால் இச் சிலையை வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசியப் பேரவையால் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் நேற்றுக் காலை முதல் புத்தர் சிலை வைக்கத் திட்டமிடப்பட்ட இடத்திற்கு முன்னால் போராட்டம் முன்னடுக்கப்பட்டுள்ளது.
இப் போராட்டததிற்கு பொலிசார் உட்பட பல்வேறு தரப்புகள் அச்சுறுத்தல்களை விடுத்திருந்தும் , திருகோணமலை மாவட்ட செயலர் நேரில் சென்று புத்தர் சிலை வைக்கப்பட மாட்டாது கலைந்து செல்லுங்கள் என வாய்மொழி மூலம் கூறியும் போராட்டக்காரர்களின் போராட்டம் தொடர்ந்தும் அவ்விடத்திலே இடம்பெற்று வருகின்றது.