கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்நாட்டில் திருமண பதிவுகள் அதிகரித்துள்ளன.
கடந்த ஆண்டில் 162,628 திருமணப் பதிவுகளும், 2020ஆம் ஆண்டில் 143,061 திருமணங்களும் நடைபெற்றதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக கம்பஹா மாவட்டத்தில் 18,591 திருமணங்கள் நடைபெற்றுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் 17,300 திருமணங்களும் குருநாகல் மாவட்டத்தில் 12,409 திருமணங்களும் இடம்பெற்றுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த வருடம் முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான திருமணங்கள், அதாவது 899 திருமணங்கள் நடைபெற்றுள்ளன.
கடுமையான கொரோனா பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக 2020இல் திருமணப் பதிவு ஓரளவிற்கு மட்டுப்படுத்தப்பட்டது, அதனுடன் ஒப்பிடுகையில், பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதே 2021இல் திருமணப் பதிவு அதிகரிப்பதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.