Thursday, January 23, 2025
HomeLatest Newsமாணவர்கள், பெற்றோருக்கு பேரிடியாக வந்த செய்தி !

மாணவர்கள், பெற்றோருக்கு பேரிடியாக வந்த செய்தி !

பாடசாலை அப்பியாச கொப்பிகள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களின் விலைகள் மூன்று மடங்காகஅதிகரித்துள்ளன.

கடதாசி மற்றும் அச்சீட்டு நடவடிக்கைகளுக்கு தேவையான ஏனைய பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக, இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக பாடசாலை உபகரணங்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக சந்தையில் கடதாசிகளின் விலை அதிகரிப்பு, இலங்கையின் வங்கி வட்டி வீதம் அதிகரிப்பு மற்றும் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி ஆகிய காரணங்களினால் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பிற செய்திகள்

Recent News