Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsஇந்தியாவுடன் கடுமையாக முரண்படும் மாலத்தீவு புதிய அதிபர்..!

இந்தியாவுடன் கடுமையாக முரண்படும் மாலத்தீவு புதிய அதிபர்..!

மாலத்தீவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய அதிபரான முகமுது முய்சு இந்தியாவுடன் கடும் மோதல் போக்கான யெற்பாட்டை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஆட்சிக்கு வந்தால் மாலத்தீவில் உள்ள இந்திய படையினரைவெளியேற்றுவேன் என தெரிவித்திருந்தார். சொன்னது போலவே ஆட்சிக்கு வந்தவுடன் தமது நாட்டில் உள்ள இந்திய இராணுவத்தை வெளியேற்றுமாறு தம்மை சந்தித்த இந்திய அமைச்சரிடம் முறைப்படி கோரிக்கையை முன்வைத்தார்.

அத்துடன் தற்போது இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள 100 க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் மீளாய்வு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிபர்அலுவலக செயலாளர் முகமது பிருசுல் அப்துல் கலீல் அளித்தபேட்டியில் மாலத்தீவு நாட்டின் அதிபராக 2018 முதல் இருந்த இப்ராஹிம் முகமது சோலியின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுடன் செய்து கொண்ட 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் மறுஆய்வு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். தற்போது தெரிவான முகமது முய்சு சீனா சார்பானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News