Friday, November 15, 2024
HomeLatest NewsIndia Newsஇறுதி கட்டத்தை எட்டியுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடம் - திறந்து வைக்கவுள்ள மோடி..!

இறுதி கட்டத்தை எட்டியுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடம் – திறந்து வைக்கவுள்ள மோடி..!

பாராளுமன்ற புதிய கட்டிடத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அதனை வரும் 28 ஆம் திகதி திறந்து வைக்கவுள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடமானது 100 ஆண்டுகள் பழமையானது என்பதால் அதற்கு பதிலாக சென்டிரல் விஸ்டா என்ற பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்திருந்தது.

அதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டயுள்ளார்.

ராஜபாதை சீரமைப்பு பொதுவான மத்திய செயலகம், பிரதமருக்கான புதிய இல்லம் மற்றும் அலுவலகம், துணை ஜனாதிபதிக்கான புதிய மாளிகை ஆகிய புதிய கட்டுமானங்களின் ஓர் அங்கமாக பாராளுமன்றம் கட்டப்பட்டு வருகின்றது.

டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டி வருகின்றது.

இந்நிலையில், பாராளுமன்ற புதிய கட்டிடத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளமையால் பாராளுமன்ற புதிய கட்டிடத்தை வரும் 28 ஆம் திகதி பிரதமர் மோடி அவர்களால் திறந்து வைக்கப்படுமென மத்திய அரசு வட்டாரங்கள் இன்று தெரிவித்துள்ளன.

Recent News