Monday, January 27, 2025
HomeLatest Newsதேசிய இணக்கப்பாட்டு அரசு - நிராகரிக்கும் சுதந்திர மக்கள் சபை..!

தேசிய இணக்கப்பாட்டு அரசு – நிராகரிக்கும் சுதந்திர மக்கள் சபை..!

தேசிய இணக்கப்பாட்டு அரசொன்றை உருவாக்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள அழைப்பை ஏற்று கொள்ளாதிருக்க டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை தீர்மானித்துள்ளது.

டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் உட்பட மொட்டு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்தே சுதந்திர மக்கள் சபையை நிறுவியுள்ளனர்.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம், மத்திய வங்கிச் சட்டம் போன்ற விடயங்களில் கொள்கையளவில் உடன்பட முடியாது போன்ற காரணங்களினாலே தேசிய அரசு யோசனையை நிராகரிக்க டலஸ் அணி தீர்மானித்துள்ளது.

அதேவேளை, பரந்துபட்ட எதிரணிக் கூட்டணியொன்றை உருவாக்குவதற்கு டலஸ் அணி போராடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News