கொசோவோ நாட்டின், நாடாளுமன்றத்தில் பிரதமர் பேசிக்கொண்டிருந்த வேளை எதிர்கட்சி எம்பி ஒருவர் அவர் மீது தண்ணீர் விசிறியடித்தமை கைகலப்பில் முடிந்துள்ளது.
அத்துடன், நாடாளுமன்றதில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
அந்நாட்டின் வடக்குப் பகுதியில் செர்பிய இனத்தவருடனான பதற்றத்தைத் தணிப்பது தொடர்பாக பிரதமர் அல்பின் குர்தி பேசியுள்ளார்.
அதன் பொழுது, எதிர்கட்சி எம்பி ஒருவர் தான் வைத்திருந்த தண்ணீரை பிரதமர் அல்பின் குர்தி, மீது விசிறியடித்துள்ளார்.
இதையடுத்து, ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதியில் ஒன்று குடியுள்ளதுடன் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
இதனால், அந்த தாக்குதலில் எம்பி ஒருவரின் முகத்தில் குத்து விழுந்துள்ளது.
இதையடுத்து, அங்கு நாடாளுமன்ற பொலிஸார் வரவழைக்கப்பட்டதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.