Saturday, January 25, 2025
HomeLatest Newsபூமியை விட்டு விலகும் நிலா; பருவநிலையில் ஏற்படவுள்ள மாற்றங்கள்! - விஞ்ஞானிகள் தகவல்

பூமியை விட்டு விலகும் நிலா; பருவநிலையில் ஏற்படவுள்ள மாற்றங்கள்! – விஞ்ஞானிகள் தகவல்

பூமியிலிருந்து நிலவு ஒவ்வொரு ஆண்டும் 3.8 செ.மீட்டர் தூரம் விலகிச்செல்வதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பூமி சூரியனை சுற்றுவது போல் நிலா பூமியை சுற்றி வருவது வழக்கம். இவ்வாறான நிலையில் நிலா பூமியை விட்டு விலகி செல்வதாக அதிர்ச்சி தகவலொன்றினை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு பூமியை விட்டு நிலா விலகி செல்வதனால் பூமிக்கும் நிலவுக்குமான தூரம் படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பூமியிலிருந்து நிலவு, ஒவ்வொரு ஆண்டும் 3.8 செ.மீட்டர் விலகிச்செல்வதாகவும், இந்த நிகழ்வு பல பில்லியன் ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பூமிக்கு நிலவுக்கும் இடையிலான தூரம் மாறுபடுவதால், பருவநிலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நிலா தோன்றிய போது 14 ஆயிரம் மைல் தொலைவில் பூமிக்கு மிக அருகில் இருந்ததாகவும் தற்போது 2 லட்சத்து 50 ஆயிரம் மைல் தூரம் விலகிச்சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Recent News