கடந்த சித்திரை மாதத்தில் ஏற்பட்ட முழு சூரிய கிரகணத்திற்குப் பிறகு, எதிர்வரும் ஆனி மாதத்தில் மற்றொரு அரிய வான நிகழ்வைக் காண மக்கள் தயாராகி வருகின்றனர்அதாவது “கிரக அணிவகுப்பு” என்று அழைக்கப்படும் இந்த வானியல் நிகழ்வு எதிர்வரும் ஆனி 3 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதன் போது வானத்தில் ஆறு கிரகங்கள் இணையும் காட்சி நிகழும்அதாவது புதன், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவை கண்கவர் காட்சியில் வரிசையாக நிற்கும்.எனினும் மக்கள் உண்மையில் ஆறு கிரகங்களுக்கு பதிலாக இரண்டு கிரகங்களை மட்டுமே பார்க்க முடியும் என்றும் அதாவது செவ்வாய் மற்றும் சனி கிரகங்களை மட்டுமே கண்களால் பார்க்க முடியும் எனவும் மேலும் அவை எதுவும் குறிப்பாக பிரகாசமாகவோ அல்லது ஈர்க்கக்கூடியதாகவோ இருக்காது என்றும் கூறப்படுகிறது.
அதேவேளை வியாழன் அதன் பிரகாசம் காரணமாக எளிதாகக் கண்டறியப்படும். கிரகங்கள் நட்சத்திரங்களைப் போல மின்னுவதில்லை. இது அடையாளம் காண உதவுகிறது. ஆனால் ஸ்கை மேப், ஸ்டார் சார்ட் அல்லது ஸ்கை டுநைட் போன்ற நைட் ஸ்கை பயன்பாட்டைப் பயன்படுத்துவது அவற்றைத் துல்லியமாகக் கண்டறிய உதவும் எனவும் கூறப்படுகின்றது.