பொதுவாகவே தொலைந்த பொருட்கள் மீண்டும் கிடைக்கும் என்பது சாத்தியமில்லாத ஒரு விடயம்.
அமெரிக்காவில் ஒரு தம்பதியினரின் தொலைந்த போன நிச்சயதார்த்த மோதிரம் 21 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் ப்ளோரிடா பகுதியைச் சேர்ந்த காதலன் தன் காதலி ஷானியாவிற்கு ஒரு வைர மோதிரத்தை கொடுத்து ப்ரொபோஸ் செய்திருக்கிறார்.
இவ்வாறு காதலன் அளித்த வைர மோதிரமானது தொலைந்து போயிள்ளது. ஷானியா மோதிரத்தை கழற்றி கழிவறையில் வைத்திருந்த போது தவறுதலாக அதனை கழிவறையில் விழுந்துள்ளதுள்ளதாக காதலனிடம் கூறியிருக்கிறார்.
அது இவர்களின் நிச்சயதார்த்த மோதிரம் என்பதால் இருவரும் செப்டிக் டான்க்கில் இறங்கி தேடியுள்ளனர். ஆனால் எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், அவர்களுக்கு திருமணமும் முடிந்தும், தனது மோதிரத்தை தொலைத்தும் 21 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னும், அந்த மோதிரம் அவர்களுக்கு திரும்ப கிடைக்கும் என காத்திருந்தனர்.
இப்படியே காலங்கள் பல கடந்த நிலையில் ஷானியாவின் மாமியார் தனது வீட்டிலுள்ள கழிவறை இருக்கையை மாற்ற முடிவு செய்துள்ளார்.
இவ்வாறு மாற்ற முடிவு செய்து கழிவறையை சுத்தம் செய்யும் வேளையில் அவருக்கும் 21 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன மோதிரம் மீண்டும் கிடைத்துள்ளது.கிடைத்த மோதிரத்தை சுத்தம் செய்து கிறிஸ்மஸ் பண்டிகையில் மகனுக்கும் மருமகளுக்கும் பரிசாக வழங்கியுள்ளார்.
இவ்வாறு தொலைந்து போன மோதிரம் மீண்டும் திரும்பக்கிடைத்தது குறித்து இருவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.