Friday, December 27, 2024
HomeLatest Newsபொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியை பறிக்க முயன்றவர் உயிரிழப்பு!

பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியை பறிக்க முயன்றவர் உயிரிழப்பு!

நெலுவ பகுதியில் பொலிஸ் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போது பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியை பறிக்க முயன்ற நபர் ஒருவர், துப்பாக்கி இயங்கியதால் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் மொறவக்க பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நெலுவ பகுதியில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News