Sunday, January 19, 2025
HomeLatest Newsமின்துறை நிபுணர்களிடம் ஜனாதிபதி முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை

மின்துறை நிபுணர்களிடம் ஜனாதிபதி முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை

தேசிய மின்கட்டமைப்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களுக்கு கணிசமான பங்களிப்பை வழங்குவதற்கு உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மின்துறை நிபுணர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை மின் உற்பத்திக்கு பங்களிப்பதில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மொத்த மின் தேவையில் 70 சதவீத புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களில் இருந்து உற்பத்தி செய்வது அரசாங்கத்தின் இலக்கு ஆகும்.

இதுவரை சூரிய சக்தியில் இருந்து கிட்டத்தட்ட 700 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் உள்ளது.

ஆனால், இலங்கை மின்சார சபை பொறியாளர்களின் எதிர்ப்பினால் அது சாத்தியமாகவில்லை என்பது பொதுமக்களின் கருத்து ஆகும்.

அதனை சரிசெய்து நிலவும் மின்சார நெருக்கடிக்கு தீர்வு காண நடைமுறை ரீதியாக உதவ முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Recent News