Tuesday, December 24, 2024
HomeLatest Newsலிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

அதிக விலை கொடுத்து எரிவாயுவை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சில குழுக்கள் அதிக விலைக்கு எரிவாயுவை விற்பனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் திசர ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே லிட்ரோ நிறுவனம் கூறிய விலையில் மாத்திரமே எரிவாயுவைப் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி, 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.2,675/- ஆகும்.

அதிக விலைக்கு எரிவாயுவை விற்பனை செய்யும் சில்லறை விற்பனையாளர்கள் இருப்பின் அருகில் உள்ள நுகர்வோர் விவகார அதிகாரசபை அல்லது லிட்ரோவின் அவசர தொலைபேசி இலக்கமான 1311 ஊடாக அறிவிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Recent News