Friday, March 29, 2024
HomeLatest Newsஉக்ரைனுக்கு தொடர்ச்சியாக ஆயுத உதவிகளை வழங்கும் முக்கிய நாடு!

உக்ரைனுக்கு தொடர்ச்சியாக ஆயுத உதவிகளை வழங்கும் முக்கிய நாடு!

உக்ரைன் மீது கடந்த பெப்ரவரி மாத இறுதியில் இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தொடங்கிய போர் 6 மாதங்களைக் கடந்துள்ளது.போரினால் பாதிப்படைந்துள்ள உக்ரைனுக்கு இராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது.
இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 600 மில்லியன் டொலர் இராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரேனிய இராணுவத்துக்கு உதவுவதற்கான இந்த நடவடிக்கை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரொக்கெட் ஏவுகணை ஆயுதங்கள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் இராணுவ ஆயுத உதவியின் கீழ் உக்ரைனுக்கு வழங்கப்படும். வெள்ளை மாளிகை இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவியாக இதுவரை 15 பில்லியன் டொலருக்கும் அதிகமான இராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News