Wednesday, December 25, 2024
HomeLatest Newsவடகொரிய ஜனாதிபதிக்கு சீன ஜனாதிபதி எழுதிய கடிதம்! 

வடகொரிய ஜனாதிபதிக்கு சீன ஜனாதிபதி எழுதிய கடிதம்! 

சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

தற்போது சீனாவில் மிக முக்கியமான ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில் வட கொரியாவிடம் இருந்து சீனா, ஆதரவு, கூட்டுறவு மற்றும் நல்லிணக்கங்களை எதிர்பார்ப்பதாக சீன ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் என வட கொரிய ஜனாதிபதி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

சீன ஜனாதிபதி குறிப்பிடும்போது, வட கொரியாவுடன் நல்லுறவுகளை மேம்படுத்துவதற்கு சீனா விரும்புவதாக கூறியுள்ளார். இந்த கடிதம் தொடர்பாக கருத்து வழங்கும்போது சீன ஜனாதிபதிக்கு ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் தேர்வு செய்யப்படுவதற்கான வாழ்த்தை வடகொரிய ஜனாதிபதி கூறியுள்ளார்.

அண்மைக்காலங்களில் தொடர்ந்து ஏவுகணை பரிசோதனைகளை செய்து மேற்கு நாடுகளுடன் வடகொரியா முரண்பாட்டை வளர்த்து வரும் நிலையில் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Recent News