Tuesday, December 24, 2024
HomeLatest Newsஅனைவரையும் வியக்க வைக்கும் நீளம்..!கின்னஸ் சாதனை படைத்த நாய்...!

அனைவரையும் வியக்க வைக்கும் நீளம்..!கின்னஸ் சாதனை படைத்த நாய்…!

நாய் ஒன்று மிகவும் விசித்திரமான முறையில் கின்னஸ் சாதனை படைத்துள்ளமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவில் லூசியானாவை சேர்ந்த ஜோயி என பெயரிடப்பட்ட லாப்ரடோர்- ஜெர்மன் ஷெப்பர்ட் கலவை நாயே இவ்வாறு அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது.

ஜோயி க்கு 12.7 சென்றிமீற்றர் நீளம் (5 அங்குலம்) கொண்ட நீளமான நாக்கினை கொண்டுள்ளது.

அதனை கால்நடை மருத்துவர் ஒருவர் அளந்து பார்த்த நிலையில் இது கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

ஜோயின் உரிமையாளர்களான சாடி மற்றும் ட்ரூ வில்லியம்ஸ், ஜோயி 6 வாரமாக இருக்கும் போது தாம் அதனை வாங்கியதாகவும், குட்டியாக இருக்கும் போதே ஜோயின் நாக்கு வாயில் இருந்து அடிக்கடி வெளியேறும்.

அதனால் அது இவ்வளவு நீளமாக வளரும் என்று நினைத்ததாகவும் இப்போது சாதனை படைத்துள்ளது என்று கூறியுள்ளனர்.

அத்துடன் தாம் ஜோயியை நடைபயிற்சிக்கு அழைத்து செல்லும் வேளையில் மக்கள் அதன் அருகில் செல்ல விரும்புவார்கள். அவர்களை முன்கூட்டியே எச்சரித்து பாதுகாப்பாக அழைத்து செல்வோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதற்கு முன்னர் பிஸ்பீ என்ற நாய் அதன் நாக்கு 9.49 சென்றிமீற்றர் இருந்தமையால் சாதனை பட்டியலில் இருந்தது.

ஆனால் தற்போது அந்த சாதனையை ஜோயி முறியடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News