Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஅல்-கொய்தா இயக்கத்தின் தலைவர் மரணம்..!

அல்-கொய்தா இயக்கத்தின் தலைவர் மரணம்..!

யேமன் நாட்டை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்த அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தலைவரான காலித் அல்-பதர்ஃபி மரணமடைந்துவிட்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும் அமெரிக்க படைகளுக்கும் இடையேயான சண்டையில் தாலிபான்களுடன் இணைந்து போரிட்டார் . அதன்பின், ’ஏ.கியூ.ஏ.பி’ என்றழைக்கப்படும் ‘அரேபிய வளைகுடா அல்-கொய்தா’ பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த அவர், 2020இல் அதன் தலைவராக பொறுப்பேற்றார்.

அரேபிய வளைகுடா நாடுகளில் அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் செயல்பாட்டை தலைமையேற்று நடத்தி வந்த காலித் அல்-பதர்ஃபியைக் கண்டுபிடிக்க உதவியாக, அவரை குறித்த தகவல் வழங்கினால் 5 மில்லியன் டாலர்கள் சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இதனை அடுத்து அவர் கொல்லப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளன . அவரின் இறப்பு குறித்தான காரணங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை இதனை அடுத்து குறித்த குழு அவரின் இழப்புக்கு கவலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

Recent News