பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் தவறி விழுந்தமை தொடர்பாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொலராடோவில் உள்ள அமெரிக்க விமானப்படை அகாடமியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
அதன் போது, விழா மேடையின் அருகே ஜோ பைடன் திடீரென தவறி கீழே விழுந்த நிலையில் அங்கிருந்த விமானப்படை அதிகாரிகள் உடனடியாக அவருக்கு உதவி புரிந்தனர்.
அதன் பின்னர் ஜோ பைடன் தனியாக எழுந்து யாருடைய உதவியும் இன்றி நடந்து சென்று தனது இருக்கையில் அமர்ந்தார்.
அந்த பட்டமளிப்பு விழாவில் சுமார் ஒன்றரை மணி நேரமாக அதிபர் ஜோ பைடன் நின்ற நிலையில் 921 பேர்களுக்கு பட்டமளித்ததுடன் அவர்களுக்கு கைகுலுக்கி பாராட்டும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை, அதிபர் ஜோ பைடன் நலமாக இருப்பதாகவும், அவருக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளது.
அத்துடன் விழா இடம்பெற்ற மேடையில் மணல் மூட்டைகள் இருந்தமையால் அதனை கவனிக்காத அதிபர் ஜோ பைடன் மிதித்து கால் தடுமாறியே கீழே விழுந்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளது.